Friday, August 8, 2008

இனியெல்லாம் சுகமே!!



வீழ்வதிலும் ஒரு எழுச்சி
அருவி
அழுவதிலும் ஒரு மகிழ்ச்சி
மழை
அடிப்பதிலும் ஒரு அழகு
அலை
மடிவதிலும் ஒரு உயிர்த்தல்
விதை
உதிர்வதிலும் ஒரு உயர்வு
மலர்
வலியுடன் ஒரு வாழ்க்கை
அந்தோணிமுத்து
என்றாலும்
இன்று ஸ்வர்க்கத்தின் மடியில்..
வாழ்வின் இனிமையில்....
சுதந்திரக் காற்றின் சிரிப்பில்....
இனியெல்லாம் சுகமே!!
இது நிறைவேற உதவிய
அன்பு மனங்களைஇங்கே
மலர்களால் பூஜை செய்கிறோம்.......
வினயமான விஷி
சினேகமான சுரேஷ்
பாசமுள்ள பாலா
செல்லச் சீனா அய்யா
மனித உருவில் கடவுள்கள்.......
கோவில்களில் இல்லை தெய்வங்கள்....
மனித மனங்களில் அவை.......
எனக்கு நீ வேண்டும் இப்போதே!
உலகின் எங்கோ ஓரிடத்தில்ஒரு கடையில் நானும்...!
அதே உலகின் ஏதோ ஒரு மூலையில்...
நான்கு சுவர்களுக்குள் நீயும்...!
நம்மை ஒன்றாக இணைக்கப் போவது யாரு?
உன்னோடு நானும்...என்னோடு நீயும்...
இணைந்து சுற்றப் போகும் இடங்கள்
எல்லாம்நமக்காக காத்திருக்கிறதே...
எப்போ எப்போவென்று?
எப்போ? எப்போ?
உன்னை என் மடியில் இருத்திசுகமாய்த்
தாலாட்டிநான் நலம் காணும்
நாளும்எதுவோ? எதுவோ?
25 வருட ஏக்கம் போதாதா?
இன்னுமா நாம் இணையும் நாள் வரவில்லை?
இனி ஒரு நாள் நீயின்றி நகராது...!
எனக்கு நீ வேண்டும் என்அந்தோணி முத்துவே!!
எனக்கு நீ வேண்டும்
இன்றே...!இப்போதே.......!
இப்படிக்கு,கதறி அழும்...
உன்சக்கர நாற்காலி....

மார்ச் 19.......நீ இப்படித்தானே அழுதாய்???
இதோ இணைத்து விட்டோம்....
இனியெல்லாம் சுகமே!!!!

இவர்கள் இணைய உதவிய அன்பு மனங்களை
இங்கே மலர்களால் பூஜை செய்கிறோம்.......
வினயமான விஷி
சினேகமான சுரேஷ்
பாசமுள்ள பாலா
செல்லச் சீனா அய்யா
மனித உருவில் கடவுள்கள்.......
கோவில்களில் இல்லை தெய்வங்கள்....
மனித மனங்களில் அவை.......